கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும்.பொதுமக்கள் நலன் கருதி 22/05/2021 இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 23/05/2021 ஒருநாள் மட்டும் காலை 06.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தால் ஒரு லட்சத்து 72 ஆயிரம் குடும்பங்கள் பலன் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.