மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன் பிடிதடை காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 61 நாட்கள் தடைகாலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.