Advertisment

அணையில் செத்து மிதக்கும் மீன்கள்; அச்சத்தில் பொதுமக்கள்

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை. தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலமாக திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

Advertisment

sathanur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சாத்தனூர் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பிக்கப் டேம்க்கு தினமும் திறந்துவிடப்பட்டு அங்கிருந்து திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் செல்கிறது.

Advertisment

இந்நிலையில் சமீப வாரங்களாக இந்த தண்ணீரில் ஒரு விதமான கவுச்சி நாற்றமும், கலங்கலகாவும் வருகின்றன என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதேசமயம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இந்த பிரச்சனை, பொதுமக்கள் குடிதண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து பின்னர் குளிர்ச்சியடையவைத்து குடிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்கிடையே, சாத்தனூர் அணையில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதந்து கரையொதுங்கியுள்ளது. இந்த தகவல் பரவி இந்த தண்ணீரை நம்பியுள்ள பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதனால் மீன்கள் செத்து மிதக்கின்றன. நீரில் யாராவது ஏதாவது கலந்துள்ளார்களா என கேள்வி எழுப்புகின்றனர். இதுப்பற்றி அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை முறையான பதில் வராத நிலையில் நமக்கு தெரிந்த அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘கோடைக்காலம் என்பதால் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ளது. நீர் குறைவாக இருப்பதால் தற்போது உள்ள வெய்யிலின் தாக்கத்தை மீன்களால் தாங்க முடியவில்லை. தண்ணீருக்குள் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டுள்ளது, இவைகளால் மீன்கள் செத்து மிதக்கின்றன’ என்கிறார்கள்.

sathanur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதோடு தற்போது மீன் தடைக்காலம் அமலில் உள்ளது. மீன் வளர்ப்புக்காக மீன் வளர்ச்சி துறை, அணைக்குள் 1.5 கோடி மீன் குஞ்சுகளை விட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட மிக அதிகம் என்கிறார்கள். ஏற்கனவே உள்ள மீன்கள் மற்றும் மீன் குஞ்சுகளோடு இவை சேர்ந்துள்ளன. நீர் இருப்பு குறைவு, இடநெருக்கடி போன்றவையும் இவை இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

fish sathanur dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe