
மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மே 24- ஆம் தேதி அன்று கடல்பாசி சேகரிக்கச் சென்றுள்ளார். வழக்கம்போல், மாலையில் வீடு திரும்பும் அவர், அன்றைய தினம் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.
இறால் பண்ணையில் வேலைப் பார்க்கும் வடமாநிலத்தவர்கள் சந்திராவைக் கிண்டல் செய்தது தெரிய வரவே, அப்பகுதியில் தேடியுள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடிய போது, சந்திரா கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பெண்ணை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மீனவ கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இறால் பண்ணையில் வேலைப் பார்த்த ஆறு வடமாநிலத்தவர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் மீனவப் பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவர் அணிந்திருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளை எடுத்து, அடக்கு கடைகளில் விற்க முற்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.