Advertisment

பிச்சாவரம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

pichavaram

கிள்ளை பகுதியை சார்ந்த மீனவர் அன்புச்செல்வன் வியாழன் அன்று மீன் பிடிக்க பிச்சாவரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவரை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதாக கூறி கிள்ளை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertisment

இரவு வரை கணவனை கானாமல் தேடிய அவரது மனைவி காந்திமதி தகவல் அறிந்து கணவரை பார்க்க இரவு 11 மணிக்கு வனச்சரக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடமும் வனத்துறையினர் மிரட்டல் தோனியில் பேசி கையெழுத்து போட சொன்னதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனையறிந்த அந்த பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் திமுக தலைமைக்குழு உறுப்பினர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் வெள்ளியன்று வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட வனஅலுவலர் உத்திரவின் பேரில் சம்பந்தபட்ட மீனவரிடம் அபராததொகை வசுலிக்கப்பட்டு விடுவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பாக இருந்தது.

இதுகுறித்து கிள்ளைரவிந்திரன் கூறுகையில் அவர் மீன்பிடிக்கவே சென்றார். சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அவரிடம் அபராததொகை வசூலித்து விடுவித்து இருக்கலாம். அல்லது காவல்துறையிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து இருக்கலாம். இரவு முழுவதும் வனத்துறை அலுவலகத்தில் கைதிபோல் வைத்து இருப்பது சட்டபடி குற்றமாகும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட வனஅதிகாரி ராஜேந்திரன் கூறுகையில் மீனவர் அன்புசெல்வன் பிச்சாவரம் சுற்றுலா தளத்திற்கு அனுமதியில்லாமல் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிசென்று பணம் வசூலித்து வந்துள்ளார்.

இதற்கு முன் இதே குற்றத்திற்காக ரூ 5 ஆயிரம் வனத்துறையிடம் அபராதம் கட்டியுள்ளார். இந்தநிலையில் வியாழக்கிழமை கும்பகோனத்தை சேர்ந்தவர்கள் 9 பேரை இவரது படகில் அழைத்து கொண்டு படகு சவாரி செய்துள்ளார்.

இதுகுறித்து சுற்றுலாதுறை படகு ஓட்டுனர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவரை பிடித்து கைது செய்துள்ளோம். படகில் சாவாரி செய்தவர்களுக்கு தலா ரூ100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை வனத்துறையினர் கைது செய்தால் 24 மணி நேரம் வனத்துறை காவலில் வைக்க. சட்டத்தில் இடம் உள்ளது. அவரது மனைவி குறித்து கூறும் தகவல் முற்றிலும் தவறானது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கேட்டுகொண்டதின் பேரில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடகூடாது என்று எச்சரித்து ரூ2 ஆயிரம் மட்டும் அபராதம் வசூலித்து அவரையும் படகையும் விடுவித்துள்ளோம் என்றார்.

Pichavaram Department forest Fishers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe