
நேற்று முன்தினம் (19.12.2021) ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், அன்று மாலையே மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பில் அரசு பேருந்து நிலையம் முன்பு நேற்று காலைமுதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், 8 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்று மாலையே ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி மாலை 4.30 மணியளவில் தங்கச்சிமடத்திலிருந்து சென்னை செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது. மீனவர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் 700 நாட்டுப் படகுகள், 3000 விசைப் படகுகள்கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)