தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் "கடலும், கடற்கரையும் கடலாளிக்கே" என்று கடலோர பிரச்சார பயணம் கடந்த 15-02-2020 சென்னை பழவேற்காட்டில் தொடங்கியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கடந்த16 ஆம் தேதிபுதுச்சேரி சோலை நகர் பகுதிக்கு வருகை தந்த பிரச்சார பயணக்குழுவுக்கு சோலை நகர்-வடக்கு, தெற்கு மீனவ பஞ்சாயத்தார் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று(17-02-2020) பயணக்குழு கடலூர் சாலையில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து வம்பாகீரப்பாளையத்தில் பிரச்சாரம் தொடங்கி வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், புதுப்பேட்டை, நல்லவாடு, நரம்பை, மூர்த்திக்குப்பம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தது.
மாலை கடலூர் மாவட்டத்திற்கு வந்த பிரச்சார குழுவுக்கு கடலூர் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது கடல் பாதுகாப்பு, கடலில் மீனவரின் உரிமை ஆகியன குறித்து விளக்கினர். நாளை நாகையில் பிரச்சார பயணம் நிறைவடைகிறது.