Advertisment

படகுகளின் முன்னாள் நின்று  மீனவப் பெண்கள் ஒப்பாரி 

f

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடா கிராமத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சேதமடைந்த படகுகளின் முன்னாள் நின்று, மீனவர்கள், மீனவப் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

Advertisment

தஞ்சாவூர் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற, இப்போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பி.பெரியண்ணன், மாவட்டக்குழு நாகேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

முழுமையாக சேதமடைந்த நாட்டுப்படகுகளுக்கு ரூ 85 ஆயிரமும், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ 35 ஆயிரமும் அரசால் வழங்கப்படுகிறது. நாட்டுப்படகுகள் விலை சாதாரணமாக ரூ 3 லட்சம் ஆகிறது. எனவே அரசு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்த படகுகளுக்கு ரூ 5 ஆயிரம் ,10 ஆயிரம் ,17 ஆயிரம் என ஒவ்வொருவருக்கும் ஒரு தொகை வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை குறைக்காமல் வழங்க வேண்டும். மேலும் முழுமையாக சேதடைந்த படகுகளுக்கான நிவாரணத்தொகை மீன்வளத்துறை உதவி இயக்குநர் பெயரில் வருகிறது. படகை காட்டினால் மட்டுமே நிவாரணப் பணத்தை தரமுடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறு மீனவர்களை நிர்பந்திக்காமல், முழு நிவாரணத் தொகையையும், பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணப் பெட்டகம் வழங்க வேண்டும். சுனாமி வீடுகளில் குடியிருப்போருக்கும் நிவாரணம் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவப் பெண்கள் புயலால் சேதமடைந்த படகுகள் முன் நின்று ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.

baga

fisherman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe