Fishermen who went to sea today after a week

மாண்டஸ் புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை தமிழக கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின்பு இன்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

Advertisment

இன்று காலை சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில், ராமநாதபுரம் பாம்பன் பகுதியில் மீனவர்கள் தற்பொழுது மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இன்று காலை மீன்பிடி அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.