/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FISHERMEN MEETS COLLECTOR-REPRESENTING SAFETY OF FISHERMEN-02.jpg)
கடந்த 9.8.2018 அன்று, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்படிப்பதற்காக 3 வல்லங்களில் கடலுக்குள் சென்ற இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 27 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FISHERMEN MEETS COLLECTOR-REPRESENTING SAFETY OF FISHERMEN-2.jpg)
இதனையடுத்து, சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் நடராஜனை, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு நாட்டுப்படகு மீனவர் சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, "இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்கள் மற்றும் வல்லங்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என கோரிக்கை வைக்க, "சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும், விரைவில் மீட்போம்." எனவும் மீனவ சங்க பிரதிநிதிகளிடத்தில் ஆட்சியர் உறுதியளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)