Advertisment

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள்.. ஒருவர் பலி..!

Fishermen who capsized in the sea in the fury of the wave ..

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையை அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (70). இவர், இன்று அதிகாலை 3 மணிக்கு புதுக்குப்பம் கடற்கரைப் பகுதிக்கு மூன்று நபர்களுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

Advertisment

இவர்கள் மீன் பிடித்துக்கொண்டு காலை 7 மணிக்கு புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருக்கும்போது, அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்துள்ளது. இதில், 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.

Advertisment

இதில் ஜெயபால் அதிகமாக தண்ணீர் குடித்துள்ளார். அவருடன் சென்ற மீனவர்கள், அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe