The fishermen were shocked as the sea turned green

Advertisment

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்த நிலையில் சென்னையிலும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. வரும் 20 ஆம் தேதி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கழிவு நீர்கள் கடலில் கலந்ததால் சென்னையில் சில இடங்களில் கடல் பகுதி கருப்பு நிறமாகக் காணப்பட்டதோடு, துர்நாற்றம் வீசுவதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் இதேபோல் குமரி மாவட்டத்தில் திடீரென கடல் பச்சை நிறமாக மாறியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரை கடல் பகுதி திடீரென பச்சை நிறமாக மாறியது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்தப் பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.