
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் தாக்குதலால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் உடல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களது மீன்பிடி பொருட்களையும் எடுத்து செல்கின்றனர். மீனவர்கள் தாக்கப்படுவது தடுப்பதற்கான தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)