
கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் மீனவர்களைக் கண்டித்து நாகை நம்பியார் மீனவர் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது “இதைப் பற்றி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஆதலால் இன்றுமுதல் (17.07.2021) தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போகிறோம். அதோடு நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து அனுமதி வழங்கவில்லை என்றாலும், தடையை மீறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட போகிறோம்” என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)