Advertisment

மீனவர்களை சந்தித்த கமல் 

kamal

Advertisment

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று கமல்ஹாசன் காலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்றார். அப்துல் கலாம் இல்லம் சென்ற கமல்ஹாசனை, கலாமின் குடும்பத்தினர் வரவேற்றார். கமல்ஹாசனுக்கு, அப்துல்கலாமின் அண்ணன் முத்துமீரான் மரைக்காயர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அப்துல் கலாம் சகோதரரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார்.

பின்னர் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்தித்து பேச சென்றார் நடிகர் கமல்ஹாசன்​. அங்கு அவரை அவரது ரசிகர்கள் வரவேற்றனர். முன்னதாக மீனவர்களை சந்திக்கும் இடத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

-நாகேந்திரன்

Fishermen Kamal Haasan Meet Rameswaram
இதையும் படியுங்கள்
Subscribe