WEATHER

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பிருப்பதால் வட தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில்,கிழக்கு மத்திய வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்கும் எனவேதெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும். நாளை 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறிய அவர் இன்றும்நாளையும் அந்தமான் மற்றும்தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அறிவித்துள்ளார்.

Advertisment

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழத்தின் ஒருசில பகுதிகளிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும்மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.