Advertisment

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு!

Fishermen boat capsize near Chidambaram

சிதம்பரம் அருகே முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான படகில் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சிங்கார குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அப்பு( 40), எம்ஜிஆர் திட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன்( 60), வீரத்தமிழன்(50), தமிழன் (52) ஆகிய நான்கு நபர்களும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பும் போது வெள்ளாற்று முகத்துவாரம் அருகே வரும் போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்துள்ளது. இதில் அப்பு, குணசேகரன் ஆகிய இருவர் தப்பித்து கரை சேர்ந்தனர். மற்ற நபர்களான வீர தமிழன், தமிழன் ஆகிய இருவரும்காணமல்போனநிலையில் அவர்களைதேடும் பணிகள் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் இன்று அதிகாலை இருவரதுஉடலும்சடலமாக கரை ஒதுங்கியது. இதனைத்தொடர்ந்துஉடல்கள்மீட்கப்பட்டுசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிள்ளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

boats chithambaram district fisherman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe