weather

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

Advertisment

மினிக்காய் தீவுகளுக்கு வடமேற்கில் சுமார் 920 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ளகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமன் கரையைநோக்கி நகரக்கூடும். மேலும் தற்பொழுதுவட அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா கரையை நோக்கி நகரும். மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபி கடல் பகுதிகளுக்குஅக்டோபர் 7 முதல் 13-ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்துவரும் இரு தினங்களில்தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில்மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. குமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனக்கூறினார்.

Advertisment