Advertisment

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை! - இலங்கை அரசு அறவிப்பு!

fishermans sri lanka government released

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், மீனவர்கள் பிடித்த மீன்களையும், அவர்களின் வலைகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சில வருடங்களுக்கு முன்பு இந்திய மீனவர்கள் மீது அந்நாட்டு கடற்படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் சில மீனவர்கள் இறந்தும் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களை விடுவித்தது இலங்கை அரசு. அதேபோல் கைதான மீனவர்கள் அனைவரும் படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 பேர் சொந்த ஊர் வந்தடைந்தனர்.

Advertisment

government Sri Lanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe