Advertisment

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புமீன்வளத்துறை நிர்வாக அலுவலகங்களில் மீன்களால் செய்யப்பட்ட உணவு மற்றும் மீன் கண்காட்சிகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும், மீனவ தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளை நடத்தி பரிசளித்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.