Advertisment

கடலில் மிதந்த மீனவர் சடலம்! சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமம்!

 fisherman who drowned in the sea

Advertisment

மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன் பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் ஆழமில்லாத கடற்பகுதிக்குசென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில்கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சேதுபாவாசத்திரம் அண்ணா நகர் புதுத்தெரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த விஜயரத்தினம் மகன் குமார் (வயது 47) புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு அண்ணா நகர் புதுத்தெரு பகுதியிலிருந்து ஒரு நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்று சுமார் 3 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். மீனவர் குமார் கடலில் மிதந்ததைக் கண்டஅருகிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவரை மீட்டு அதிகாலை 4 மணிக்கு கடற்கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்துசேதுபாவாசத்திரம் கடற்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.இறந்து போன மீனவர் குமாருக்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும்இரு மகள்களும் உள்ளனர். பிழைப்பிற்காக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் குமார் சடலமாக கரைக்கு கொண்டுவரப்பட்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

fisherman Thanjavur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe