Advertisment

நான்கு நாட்கள் தேடியும் கிடைக்காத மீனவர், கதறும் உறவினர்கள்!

Fisherman not found after four days of searching; Screaming relatives

நாகப்பட்டினத்தில் இருந்துமீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கி மாயமானார். காணாமற்போன மீனவரை மீட்டுத்தருமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாயக்கர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து.

Advertisment

இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த இரண்டாம் தேதி இரவு நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்து, முருகவேல், ரவி, செல்வகுமார் உள்ளிட்ட 11 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடந்த 5ஆம் தேதி இரவு சென்னையை அடுத்து 40 நாட்டிக்கல்மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து ஆனந்த் என்பவர் கடலுக்குள் தவறி விழுந்திருக்கிறார்.

Advertisment

இந்திய கடலோர காவல்படையினரும் மீனவர்களும் கடந்த நான்கு நாட்களாக தேடியும் அந்த மீனவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொழிலுக்குச் சென்ற மீனவர்களும் ஏமாற்றத்துடன் இன்று (09.07.2021) நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர். நாகப்பட்டினம் கடலோரகாவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். மாயமான ஆனந்திற்கு 2 மகன்கள் உள்ளனர். மாயமான மீனவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

fisherman missed Nagapattinam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe