கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகேயுள்ள சின்னூர்மீனவ கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மீனவர்கள் படகில் மீன்பிடிக்க பரங்கிப்பேட்டை கடற்கறை பகுதிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத அன்னங்கோவில்என்ற இடத்தில் அலையின் சீற்றம் அதிமாக இருந்ததால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12356767.jpg)
மீனவர்கள் கடலில் நீந்திக் கொண்டு கரைக்கு வந்தனர். அதில் நரசிம்மன்(26) என்ற மீனவர் மட்டும் கரைக்கு வரவில்லை. அவரை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு மாலை 3 மணி அளவில் சாமியார் பேட்டை கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கியது இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow Us