Advertisment

கடல்பசு வெட்டி விற்ற மீனவர் கைது!

கடலில் பல்வேறு உயிரினங்களை பிடிக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அதில் அரிய வகை கடல்பசுவை வெட்டி விற்பனை செய்த மீனவரை கடலோர காவல்துறையினர் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

Advertisment

Fisherman arrested in thanjavur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மந்திரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் அடைக்கலம் (வயது 25). இவர் சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, இவரது வலையில் அவுரியா எனப்படும் அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமாக கடல்பசு சிக்கியது. கடல்பசு வலையில் சிக்கினால் அதை மீனவர்கள் உயிருடன் கடலுக்குள் விட்டு விடுவது வழக்கம். பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரியினமான கடல்பசுவை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடல்பசுவை கரைக்கு கொண்டு வந்த மீனவர் அடைக்கலம், அதை வெட்டி துண்டுகளாக்கி விற்பனை செய்வதாக கடலோர காவல்துறை ஆய்வாளர் சுபாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோரக் காவல்துறையினருடன் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், கடல்பசு இறைச்சி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மீனவர் அடைக்கலத்தை பிடித்து, பட்டுக்கோட்டை வனத்துறையினரிடம் கடலோரக் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் கடல்பசு இறைச்சியை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் மகன் கணேசனை தேடி வருகின்றனர். மீனவர் அடைக்கலத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் மதுமகேஷ் கூறுகையில், ஆவுரியா எனப்படும் கடல்பசு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பிடிப்பதும், விற்பனை செய்வதும், இறைச்சியை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.

arrest fisherman police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe