Skip to main content

ஊராட்சி மன்ற தலைவி தள்ளிவிட்டதில் மீன் வியாபாரி மரணம்! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

Fishmonger dies after being pushed by panchayat leader

 

ஊராட்சி மன்ற தலைவி ஆத்திரத்தில் தள்ளிவிட்டதில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள புன்னகாயல் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவி சோஃபியாவின் மகனுக்கும், செல்வராஜ் என்பவரின் மகன் லெஸிங்ண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மீன் வியாபாரியான செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோஃபியா, ஆத்திரத்தில் அவரை கீழே தள்ளியதாகத் தெரிகிறது. 

 

காயமடைந்த செல்வராஜை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து லெஸிங்ண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்