Fish incident in sivakangai

Advertisment

சிவகங்கையில் கண்மாயில் மீன் பிடிக்கும்போது உயிருடன் இருந்த மீன், தொண்டைக்குள் சிக்கி அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள பெரியகண்மாயில் இளையராஜா என்பவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, பிடித்த கெளுத்திமீனை வாயில் கவ்விக்கொண்டு, அடுத்த மீனைப் பிடிக்க முற்பட்டுள்ளார். அச்சமயம் வாயிலிருந்துநழுவி தொண்டைப் பகுதிக்குச் சென்ற கெளுத்தி மீன் தொண்டையை அடைத்துக்கொண்டதால் இளையராஜா உயிரிழந்துள்ளார். வீட்டிற்காகசிலர் மீன்பிடிக்கும்போது இதுபோன்று மீன்களை, வலைகளை வாயினில்கவ்விக்கொள்ளும் முறையைப் பின்பற்றுவது என்பது கிராமப் பகுதிகளில்சாதாரணமாக காணப்படும் ஒன்றாகும். அதேநேரம் கெளுத்தி மீன் அதிக வழவழப்புத் தன்மை கொண்டதாகும். அவற்றை இவ்வாறுகையாளுவதுதவறு என்பது குறிப்பிடத்தக்கது.