Skip to main content

20 முதல் லாரிகள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் - நாள் ஒன்றுக்கு 400 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
ly

 

கோவையில்  டீசல் விலை உயர்வு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிக சுங்கக் கட்டணம் வசூலிப்பதை குறைக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 

கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டமானது வடகோவையில் உள்ள லாரி உரிமையாளர்கள் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.     அதில், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

  அப்போது மத்திய அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி காலை 6 மணி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும். இதில், கோவை லாரி உரிமையாளர்கள் திரளாக பங்கேற்றமுடிவு செய்யப்பட்டுள்ளது என்று கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 10,000 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.


இதில்  டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் டீசல் விலை ஏற்றம், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, சுங்கவரி கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்தார்.


 விரைவில் டேங்கர் லாரிகள் கண்டெய்னர்கள் ,மினி ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஆதரவு தர உள்ளனர்.

 இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

 மேலும், வரும் 20ம் தேதியன்று தங்களுக்கு ஆதரவாக ஒருநாள் மட்டும் பொதுமக்களும் தங்களது வாகனங்களை இயக்காமல் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால்,பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்