Skip to main content

“கரோனா பரவல் தடுப்பதின் முதல் நடவடிக்கை மதுக்கடைகளை மூடுவதே..” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

"The first step in preventing the spread of corona is to close liquor stores." - Ramadoss

 

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், நேற்று தமிழ்நாடு அரசு புதிதாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கட்டுபாடுகளை இன்னும் கடுமையாக்கவும், மதுகடைகளை மூடவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட, இன்று ஒவ்வொரு பேருந்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இதற்கான காரணங்களில் முதன்மையானது பள்ளிகள் இயங்குவது தான். இது கரோனாவை கூடுதலாக பரப்பும். வணிக வளாகங்கள், பெரிய கடைகளிலும் கூட்டம் கட்டுக்கு அடங்கவில்லை. தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்று 5 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இது முதல் அலையின் உச்சத்தில் 80%. பொது இடங்களில் கூட்டம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் ஆபத்து உள்ளது.

 

எனவே, கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். வணிக வளாகங்களையும், பெரிய கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முதல் நடவடிக்கை  மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும். பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாத மதுக்கடைகள் கரோனாவை பரப்பும். அதனால் மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்