The first song in the new studio ... Ilayaraja again

பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இளையராஜாவிற்கும் ஏற்பட்ட மோதல்களை அடுத்து, பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறியஇளையராஜா, இன்று (03.02.2021) புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறார் .

Advertisment

சென்னையில் உள்ள புதிய ஸ்டூடியோவில் இளையராஜா தனது புதிய பாடலின்ஒலிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ இன்று திறக்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை ஒலிப்பதிவு செய்கிறார்.

Advertisment

வடபழனியில் இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதால், இந்தப் புதிய ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கியுள்ளார். பல ஆண்டுகளாக தனது படத்தின் பாடல் பதிவு மற்றும் இசைக்கோர்ப்புப் பணிகளை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில்தான் மேற்கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.