Published on 11/02/2021 | Edited on 11/02/2021

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (11.02.2021) நடைபெறுகிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதா என்பது குறித்த முக்கிய அரசியல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக வாய்ப்புகள் உள்ளன.
பிப்ரவரி 21ஆம் தேதி நடக்கும் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் பற்றியும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.