/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fghgh_5.jpg)
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தற்போதுஉயிரிழந்துள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி சிகிச்சை பலனின்றி தற்போதுஉயிரிழந்துள்ளார். சென்னை காவல்துறையில் இதுவரை 731 போலீசார்கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 278 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அயனாவரம் குற்றபிரிவு காவல் ஆய்வாளருக்கும்கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுதனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.தற்போது அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.