
யு.பி.எஸ்.சியின் இந்திய குடிமைப் பணிக்கான 2020ஆம் ஆண்டு நடந்த தேர்வில் இந்திய அளவில் 108வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறார் தென்காசி நகரின் அலங்கார்நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி சண்முகவள்ளி.
முதலிடம் பிடித்த சண்முகவள்ளியை திமுகவின் மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது அமைச்சர்கள்அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான கிருஷ்ணா ராஜ் ஐ.பி.எஸ், சண்முகவள்ளியைபாராட்டியதோடு சான்றிதழும், புத்தகமும் வழங்கினார். பணியில் நேர்மையுடனும்விழிப்புடனுமிருந்து மக்கள் பணியில் தொய்வின்றி திறம்பட செயல்பட வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார்.
Follow Us