Advertisment

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நிறைவு... டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு!

hg

தமிழ்நாட்டில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது. மதியத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு சீராக அதிகரித்த நிலையில் மாலை 5 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு வேகமெடுத்தது.

Advertisment

6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய இருந்த நிலையில் 5.30 மணிக்கு மேல் தென்காசி, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பல வாக்குப்பதிவு மையங்களில் பெண்கள் கூட்டம் அதிக அளவு திரண்டது. இதனால் 6 மணிக்கு முன் வந்த அனைவருக்கும் தேர்தல் அதிகாரிகள் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதித்து வருகிறார்கள். இந்த வாக்குப்பதிவு முடிந்த பிறகே தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலில் எவ்வளவு பேர் வாக்களித்தார்கள் என்ற எண்ணிக்கையைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு 6 மணி அளவில் நிறைவடைந்தது.

Advertisment

Local bodies elections
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe