ADVERTISEMENT

முடிந்தது முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை... ஊராட்சிக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவு!

05:25 PM Oct 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை 5 மணியுடன் நிறைவுபெற்றது. 5 மணிக்கு மேல் தேர்தலில் தொடர்பில்லாத நபர்கள் ஊராட்சிகளிலிருந்து வெளியேற மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள், பார்களை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மொத்தமாக இந்த தேர்தலில் 24,417 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT