Advertisment

முடிந்தது முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை... ஊராட்சிக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவு!

 The first phase of the local election campaign is over ... Those who have nothing to do with the panchayat are ordered to leave!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்றமாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் முதற்கட்ட ஊரகஉள்ளாட்சித்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை 5 மணியுடன் நிறைவுபெற்றது. 5 மணிக்கு மேல் தேர்தலில்தொடர்பில்லாத நபர்கள்ஊராட்சிகளிலிருந்துவெளியேற மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில்டாஸ்மாக்கடைகள், பார்களை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊரகஉள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மொத்தமாக இந்த தேர்தலில்24,417 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Advertisment

election commission local body indirect election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe