Advertisment

தமிழகத்துக்கு வருகிறது முதல் ஆக்சிஜன் ரயில்!

The first oxygen train coming to Tamil Nadu!

இந்தியாவில் கரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கரோனாவால்பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், கரோனாதடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாககரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவருகின்றன.அதேபோல், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

Advertisment

அந்த வகையில், மேற்கு வங்கமாநிலம்துர்காப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் தமிழகம் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்துக்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் உள்ள தண்டையார்பேட்டைக்கு இன்று (13/05/2021) நள்ளிரவு 01.00 மணிக்கு வருகிறது.

Advertisment

இதனிடையே, பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனி என்ற நிறுவனத்தில் இருந்து மேலும் 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

Tamilnadu trains oxygen
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe