Advertisment

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு; உற்சாகத்தில் தச்சங்குறிச்சி

 First jallikattu of the year; pudukottai ​​in excitement

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற இருக்கிறது. இதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கிராம மக்கள் பங்கேற்று ஆரவாரம் செய்ய இருக்கின்றனர். 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற இருக்கின்றனர்.

Advertisment

பாதுகாப்பிற்காக வாடிவாசல் பகுதியிலிருந்து குறிப்பிட்ட பகுதி வரை மணல், தேங்காய் நார் உள்ளிட்டவை கொட்டப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு முறையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கதேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் வந்துள்ளன. இன்று காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் முறையாக கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

Advertisment

TNGovernment jallikattu Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe