Published on 04/01/2025 | Edited on 04/01/2025

2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று நடைபெற இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் அமைந்துள்ள பிரசித்தி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
மஞ்சுவிரட்டு, வடமாடு, ஜல்லிக்கட்டு என தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பொங்கல் விழாவை ஒட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா போட்டியை அமைச்சர் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 750 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.