First domestic air service to be launched tomorrow

Advertisment

நாடு முழுவதும் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள் உடன் கூடிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதில், உள்நாட்டு விமானங்கள் மூலம் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் tnepassஎன்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். பிற மாநிலங்களிலிருந்து விமானத்தின் மூலம் வருவோருக்குகரோனாபரிசோதனை நடத்தப்பட வேண்டும். விமான நிலையங்களில் பரிசோதனை செய்த பிறகு அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்படும். காய்ச்சல் அறிகுறி மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதியிலிருந்து வருகிறீர்களா போன்ற கேள்விகளுக்கு பதில் தரவேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.