Advertisment

தவெக முதல் மாநாடு; பந்தல் கால் நடும் விழா

 First Convention; Pandal foot planting ceremony

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், அரசியல் கட்சியை அறிவித்ததை தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என அடுத்தடுத்து நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் த.வெ.க. கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப்பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து முதல் மாநாட்டை நடத்த தமிழக வெற்றி கழகம் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்ட ஏற்பாடுகளை கட்சியின் தலைமை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற இருக்கிறது. இதில் தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Advertisment
tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe