'The first conference in the village' - announced by the T.V.K

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படிஅண்மையில்பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப்பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.

Advertisment

கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் செப்.23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் எஸ்.பி அலுவலகத்தில் மனுகொடுக்க சென்ற பொழுது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லை. அதனால் அவருக்கு அடுத்தகட்டமாக உள்ள அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், செப்டம்பர் 23ஆம் தேதி வி.சாலையில் கிராமத்தில் மாநாடு நடத்த தங்களுக்கு அனுமதி வேண்டும் மற்றும் பாதுகாப்பு வேண்டும். 85 ஏக்கரில் மாநாடு நடத்துவதற்கான இடமும், வலது இடது புறங்களில் வாகனங்களில் நிறுத்துவதற்கான இடமும் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் இதே கோரிக்கைக்காக மனு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.