'First conference' - tvk requested the police

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக மாநாடு தேதி செப்.23 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநாடு ஏற்பாடுகளை செய்வதற்கான காலம் குறைவாக இருப்பதால் மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு குறித்த காவல்துறையின் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பதில் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளார். காவல் துறை விதித்த 32 நிபந்தனைகளில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு எதிரகவேவாகனம் நிறுத்தும் இடத்தை அமைக்க காவல்துறையினர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடக்க உள்ள பகுதியிலேயே புதிதாக 27 ஏக்கர் நிலம் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தவெக விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் மாநாட்டில் பங்கேற்க வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்துறையிடம்தவெக கோரிக்கை வைத்துள்ளது.