Skip to main content

 புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு முதல் உடல் தானம்!

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
udal

 

புதுக்கோட்டை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 80). இவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு மலர்விழி என்ற மகளும், சரவணபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். சரவணபிரகாஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ராஜேந்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன், மகள் மற்றும் மனைவியின் சம்மதத்துடன் தனது உடலை  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்வதாக விண்ணப்பம் கொடுத்து இருந்தார். 

 

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை உடல்நலக்குறைவின் காரணமாக ராஜேந்திரன் மரணம் அடைந்தார். இந்த தகவல் சிங்கப்பூரில் உள்ள அவரது மகன் சரவணபிரகாஷிற்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ராஜேந்திரன் மனைவி, மகன், மகள் மலர்விழி ஆகியோர் ராஜேந்திரன் விரும்பியபடியே அவரது உடலை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்ய முன்வந்தனர்.


 இதையடுத்து தங்களது விருப்பத்தை புதுக்கோட்டையில் உள்ள மக்கள் மருத்துவர் ராமதாஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சாரதாவிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் உடலை தானம் பெற்று கொள்வதாக தெரிவித்தார். மாலையில் சிங்கப்பூரில் இருந்து சரவணபிரகாஷ் புதுக்கோட்டைக்கு வந்த பிறகு புதுக்கோட்டை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து ராஜேந்திரனுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை சரவணபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து முடித்தனர். தொடர்ந்து ராஜேந்திரனின் உறவினர்கள் அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ராஜேந்திரனின் உடலை தானமாக கொடுத்தனர். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கி ஒரு வருடத்தில் ஒருவர் உடல்தானம் பெருவது இதுவே முதல் முறையாக உள்ளது. 


முன்னதாக அவரது கண்களை திருச்சியில் உள்ள ஒரு தனியார் கண்மருத்துவமனையினர் எடுத்துச் சென்றனர்.   இது குறித்து ராஜேந்திரனின் உறவினர்கள் கூறும் போது.. முதியவர் ராஜேந்திரன் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முன்பு உணவகம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து உள்ளோம். இதேபோல அனைவரும் உடலை தானம் செய்ய முன்வர வேண்டும் என்றனர்.
        
 

சார்ந்த செய்திகள்