Advertisment

சமயபுரம் கோவிலில் முதலுதவி மையம்! 

Advertisment

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுகளை சரி செய்வதற்கு ஒவ்வொரு கோவில்களிலும் முதல் உதவி மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் அருகில் பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முதலுதவி மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோவில் இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

temple trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe