Advertisment

பட்டாசு கிடங்கில் தீ விபத்து; சூழும் கரும் புகையால் மக்கள் அச்சம்

Fireworks warehouse fire; People are afraid of surrounding smoke

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் என்ற பகுதியில் வடிவேல் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டாசுக் கிடங்கு ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வான வேடிக்கை பட்டாசுகள் மற்றும் சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் பல அடி உயரங்களுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vck ad

Advertisment

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஆனால் பட்டாசு குடோன் என்பதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்துச் சிதறுகிறது. இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்கு விபத்துகாரணமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Krishnagiri Hosur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe