Advertisment

கொல்லப்பட்டி பட்டாசு குடோன் விபத்து; உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு

Fireworks godown Incident; Casualties rise to 6

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

சேலம் இரும்பாலை பகுதியில் இருக்கக்கூடிய சர்க்கார் கொல்லப்பட்டியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கனூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் அன்று மாலை 4:30 மணியளவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது.

Advertisment

இந்த விபத்தில் படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே குடோன் உரிமையாளர் சதீஷ்குமார், கடையில் பணியாற்றி வந்த நடேசன், மற்றும் பானுமதி என மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்றிலிருந்து ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். பிரபாகரன், மோகனா, மகேஸ்வரி, வசந்தா, மணிமேகலை உள்ளிட்ட ஆறு பேர் பயங்கரமான தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆறு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் உயிரிழந்தார். தொடர்ந்து மோகனா உயிரிழந்தார். இந்நிலையில் ஆலையின் பங்குதாரர்களில் ஒருவரான மகேஸ்வரி உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

incident crackers Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe