Fireworks factory incident... Tamil Nadu government announces relief

2022, ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று காலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது.

Advertisment

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்டுப்பணியில் இறங்கினர். கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் ரசாயனப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையிலிருந்து மீட்கப்பட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேர்க்கப்பட்ட எழுவரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி மற்றும் ஊழியர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.