Advertisment

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Fireworks Factory incident One person was involved

Advertisment

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் ஆரியா பட்டாசு ஆலை என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை தொழிலாளர்கள் தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ பிடித்து வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வெடி விபத்து ஏற்பட்டபோது பட்டாசு ஆலையில் 5 பேர் பணியாற்றியதாகவும் ஆலையில் இருந்து 2 பேர் வெளியேறி விட்டதாகவும், இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வேம்பு என்பவர் சிக்கி பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருவர் ஆலையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

crackers fire Sivakasi Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe