தீபாவளி நெருங்கிவிட்டாலே சிவகாசி ‘திக்திக்’ என்று அடித்துக்கொள்ளும். காரணம்- பட்டாசு உற்பத்தியில் காட்டும் வேகமும், அதனால் ஏற்படும் விபத்துகளும் தான். இன்றும் அப்படி ஒரு வெடிவிபத்து சிவகாசி அருகிலுள்ள சல்வார்பட்டியில் நடந்திருக்கிறது. பாஸ்கரன் என்பவருக்குச் சொந்தமான ரவீந்திரா பயர் ஒர்க்ஸில் நடந்த அந்த விபத்தில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/idinthu tharaimattam888888.jpg)
இன்று காலை எப்போதும்போல் பட்டாசு உற்பத்தி பணியில் அங்கு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். வெடி மருந்து கலவை ரூம்தான் திடீரென வெடித்திருக்கிறது. வழக்கமாகச் சொல்லப்படும் உராய்வு தான் இந்த வெடி விபத்துக்கும் காரணம் என்கிறார்கள். விபத்தில் வெடி மருந்து கலவை அறையும் பக்கத்தில் உள்ள அறைகளும் இடிந்து தரைமட்டமானது. சிவகாசியிலிருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துவிட்டு மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.
Follow Us