Advertisment

'இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி' - சென்னை காவல்துறை எச்சரிக்கை

n

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பொது இடங்கள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

Advertisment

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்; தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; பட்டாசுகளால் விபத்து நேர்ந்தால் 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனே அழைக்க வேண்டும்; சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள்மட்டுமே விற்கப்பட வேண்டும், வெடிக்கப்பட வேண்டும்; தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ/வெடிப்பதோ கூடாது; பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் முற்றிலுமாகத்தவிர்க்க வேண்டும்; பெரியவர்களின் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகளிடம் தனியாக பட்டாசு வெடிகளை கொடுத்து வெடிக்க அனுமதிக்கக் கூடாதுஎனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் மட்டும் தீபாவளியன்று சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Festival diwali Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe